உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேட்டையில் ஜேஷ்டாபிஷேகம்

கேட்டையில் ஜேஷ்டாபிஷேகம்


கேட்டை நட்சத்திரத்திற்கு வடமொழியில் ‘ஜேஷ்டா ’ என்று பெயர்.  உலக நன்மைக்காக ஆனி கேட்டை நட்சத்திரத்தில் நடத்தப்படுவது ‘ஜேஷ்டாபிஷேகம்’. அன்று காலையில் பழநி முருகனுக்கு காலையில் ஜேஷ்டாபிஷேகமும், பகல் 12:00 மணிக்கு உச்சிக் காலத்தில் அன்னாபிஷேகமும் நடக்கும். கேட்டை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன். இந்நாளில் முருகனை வழிபட்டால் இந்திரன் போல ராஜபோக வாழ்வு அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !