ஏற்றத்தாழ்வு இல்லாத நாடு
ADDED :1959 days ago
இயேசு பிறந்த இஸ்ரேல் நாட்டில் மக்களின் வாழ்க்கை வித்தியாசமாக இருந்தது. நாட்டு மக்களை 290 பிரிவுகளாகப் பிரித்தனர். இந்த பிரிவுக்கு இஸ்ரேல் மொழியில் ‘கிட்பூட்ஸ்’ என பெயர். ஒவ்வொரு பிரிவுக்கும் விவசாய நிலம் தரப்பட்டு, வேலை பகிர்ந்தளிக்கப்பட்டது. கிடைக்கும் விளைச்சல் அல்லது வருமானத்தில் எல்லா பிரிவுக்கும் சமபங்கு தரப்பட்டது. இங்கு அனைவருக்கும் சம அளவுள்ள வீடு, சம அளவில் டைனிங் ஹால், சமையல் பாத்திரங்கள். உடை, கல்வி முதலானவை தரப்பட்டது. எல்லா குழந்தைகளும் சமமாகப் பேணப்பட்டனர். இதற்கான பொறுப்பை ஒரு கண்காணிப்பு குழு கவனித்தது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயமாக அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.