வீடுகட்ட வழிபாடு!
ADDED :1958 days ago
சேலம் மாவட்டம் வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் பக்தர்கள் வீடு கட்டுவதற்காக வித்தியாசமான வழிபாடு செய்கிறார்கள். மலைக்குச் செல்லும் வழியில் இடும்பன் சந்நிதி இருக்கிறது. இதனருகே அவ்வைப்பாட்டி, முருகன் சிலைகள் உள்ளன. இங்கு பக்தர்கள் கற்களை அடுக்கி வைத்து சுவாமியை வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தங்களது வீடு கட்டும் கனவு நிறைவேறும் என நம்புகின்றனர்.