மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1907 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1907 days ago
நாமக்கல்: புதிய வாகனங்கள் வாங்கி வரும் உரிமையாளர்கள், ஆஞ்சநேயர் கோவில் முன் தாங்களாகவே பூஜை செய்து செல்கின்றனர். நாமக்கல், ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான சுவாமி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பக்தர்களில் பலர் லாரி, பஸ், கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட புதிய வாகனங்கள் வாங்கினாலும், புதிய நிறுவனங்கள், வீடு ஆகியவை அமைந்தாலும் அதன் உரிமையாளர்கள், சாவியை அர்ச்சகர்கள் மூலம் ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து எடுத்துச் செல்வர். தற்போது, கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால், கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய வாகனங்கள் வாங்கி வரும் பக்தர்கள், வாகனங்களை வெளியில் நிறுத்தி மாலை, எலுமிச்சை சாற்றி, தேங்காய் உடைத்து கற்பூரம் தீபம் ஏற்றி தாங்களாகவே பூஜை செய்து வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.
1907 days ago
1907 days ago