ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு
ADDED :1969 days ago
செய்யூர்: செய்யூர் தாலுகா, சூணாம்பேடு அடுத்தகடுக்கலுாரில், அம்புஜவல்லி நாயிகா சமேத ஆதிகேசவப்பெருமாள் கோவில் உள்ளது. உலக நன்மைக்காக, ஆனி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று, இக்கோவிலில் உள்ள பக்த ஆஞ்சநேயர்சுவாமிக்கு, வெண்ணெய் காப்பு அலங்காரம் மற்றும் அர்ச்சனை நடந்தது. முழு ஊரடங்கு அமலில் இருந்ததால், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. கோவில் அர்ச்சகர் மட்டுமே பங்கேற்றார்.