முருகபக்தர்கள் கோரிக்கை
ADDED :1978 days ago
கோவை, கந்த சஷ்டி கவசம் பாடலை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில முருக பக்தர் பேரவை தலைவர் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கந்த சஷ்டி கவசம், முருக பக்தர்களின் புனித பாடலாக கருதி தினமும் பாடி வருகின்றனர். உடல் உறுப்புகள் அனைத்தும் நோய்தொற்று இல்லாமல் காக்க முருகன் அருள் புரிய வேண்டும் என்பதுதான் அதன் பொருள். ஆனால், இதை கொச்சைப்படுத்தும் வகையில், முருக பக்தர்களை புண்படுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.