சஷ்டி கவசம் குறித்து அவதுாறு நடவடிக்கை எடுக்க முறையீடு
சென்னை : கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் ஆஜராகி, கருப்பர் கூட்டம் யு டியூப் சேனலில், சஷ்டி கவசம் பற்றி அவதுாறாக சித்தரித்து, வெளியிட்டுள்ளனர்.இதற்கு காரணமானவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.அப்போது, நீதிபதிகள் குறுக்கிட்டு, இதுகுறித்து மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனர்.
முன்ஜாமின் மனுஇதற்கிடையில், சஷ்டி கவசம் குறித்து, அவதுாறாக விமர்சனம் செய்திருப்பது குறித்து, போலீஸ் ஆணையர் அலுவலகத்தில், பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் புகார் செய்தன.இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார், வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில், முன்ஜாமின் வழங்க கோரி, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர், தாக்கல் செய்த மனுவில், ஜனவரியில் வெளியிட்ட பதிவுக்கு, இப்போது புகார் அளித்துள்ளனர். இரு பிரிவினருக்கு இடையில் விரோதத்தை துாண்டும் விதமாக செயல்பட்டதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் செயல்பட்டேன் என, கூறப்பட்டுஉள்ளது.