வளையாமல் வளர்ச்சி இல்லை
வலியுறுத்துகிறார் ஸ்ரீஅன்னை
* மனிதனுக்கு வளைந்து கொடுக்கும் குணம் வேண்டும். இல்லாவிட்டால் வளர்ச்சியடைய முடியாது.
* நல்லதும், கெட்டதும் மாறி மாறியே வரும். அதனால் பொறுமையுடன் வாழ்வை எதிர்கொள்ளுங்கள்.
* காலத்தை மதியுங்கள். இப்போதே நற்செயலில் ஈடுபடுங்கள். காலத்தை வீணாக்கினால் வருந்த நேரிடும்.
* யாரும் உலகில் தனியாக இல்லை. எப்போதும் நம்முடன் கடவுள் இருக்கிறார். அவர் மீது நம்பிக்கை வைத்து பணியாற்றுங்கள். * சாப்பிடும் முன் வழிபாடு செய்யுங்கள். சாதிக்கும் வல்லமையும், ஊக்கமும் உணவின் மூலம் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுங்கள்.
* மற்றவர் மகிழ்ச்சியடையும் போது மகிழ்வதும், பிறர் துயரம் கண்டு வருந்துவதும் இரக்கம் உள்ளவர்களின் தனிச்சிறப்பு.
* எந்த விஷயத்தையும் அமைதியுடன் அணுகுவதே வலிமையின் அடையாளம். பலவீனமான மனம் கொண்டவனே எப்போதும் கடுகடுப்பாக இருப்பான்.
* முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தற்புகழ்ச்சியை கைவிடுங்கள். ஏனெனில் அது வளர்ச்சியைத் தடை செய்யும். * எதிர்பார்ப்பு இல்லாமல் கடவுள் மீது பக்தி செலுத்துவதே சிறந்தது. இதுவே மேலான மகிழ்ச்சியைத் தரும்.
* தவறை உணர்ந்து வருந்தினால் அதற்கான மன்னிப்பு கிடைக்கும். அதை மறைக்கவோ, மறுக்கவோ செய்தால் தவறு பெரிதாகி விடும்.