பகவான் யோகி ராம் சுரத்குமாரின் 25 ஆம் ஆண்டு ஆராதனை விழா நிறைவு
ADDED :1 days ago
திருவண்ணாமலை; கிரிவலப் பாதையில் உள்ள யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், பகவான் யோகி ராம் சுரத்குமாரின் 25 ஆம் ஆண்டு ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவு நாளான இன்று மகன்யாச பூஜை நடந்தது. தொடர்ந்து, பகவான் யோகி ராம் சுரத்குமார் சன்னதிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.