விலை உயர்ந்த பொருள்
ADDED :1949 days ago
பாரசீக மொழியில் புகழ் மிக்க காவியங்களை எழுதியவர் மவுலானா ஜாமி. இவர் வினோத பழக்கம் கொண்டவராக இருந்தார். வெளியே கிளம்பும் போது வீட்டின் கதவுகளை திறந்து வைத்து விடுவார். மீண்டும் வரும் போது கதவுகளை சாத்தி விடுவார்.
ஒரு நாள் நண்பர் ஒருவர் ‘‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? எல்லோரும் உள்ளே இருக்கும் போது கதவை திறந்து வைத்திருப்பர். வெளியே போகும் போது கதவை சாத்திவிட்டு செல்வர். நீங்கள் ஏன் மாறுபடுகிறீர்கள்?’’ எனக் கேட்டார்.
‘‘ இந்த வீட்டுக்குள் இருக்கும் மிக விலை உயர்ந்த பொருள் நான்தான். அதனால் கதவை மூடிக் கொள்கிறேன். அதனால் வெளியே செல்லும் போது வீட்டிலுள்ள மற்ற பொருட்கள் பற்றி கவலைப்படுவதில்லை’’ என பதிலளித்தார்.