சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நேற்று நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் செய்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி மூலவர் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, கணபதி பூஜை, லட்சுமி ஹோமம், கலச பூஜை, நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மூலவருக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட 16 வகை விசேஷ திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். திருப்பாவை, திவ்யபிரபந்தம் பாடல்கள் பாடி சுவாமிக்கு கலச நீர் ஊற்றி அபிஷேகம் , மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.