கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆளும் பல்லாக்கு உற்சவம்
ADDED :193 days ago
கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று ஆளும் பல்லாக்கு உற்சவம் நடந்தது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த மாதம், 24ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா, சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி, திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சி நடந்தது. நேற்று ஆளும் பல்லாக்கில் பசுபதீஸ்வரர், அலங்கார வள்ளி, சவுந்திர நாயகி, நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள் சிறப்பு வாகனங்களில் திருவீதி உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இன்று ஊஞ்சல் உற்சவம், நாளை வெள்ளி வாகனத்தில், உற்சவர் திருவீதி உலா நடக்கிறது.