விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்
ADDED :192 days ago
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் 476ம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 25ம் தேதி கொடியேற்றம், மாலையிடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 26ம் தேதி திருக்கல்யாண உற்சவம் மற்றும் தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு கோட்டை இடித்தல் மற்றும் மாலை 5:00 மணிக்கு தீமிதி விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.