உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம்

நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம்

மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இங்கு பழைமையான அஷ்டா தசபுஜ மகாலெட்சுமி துர்கா தேவி (18 கைகளுடன் கூடிய) அம்பாளுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு நவராத்திரியை முன்னிட்டு, 9 நாட்கள் நடைபெறும் சதசண்டி மகாயாகம் கடந்த 10ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. நவசண்டி யாகம், நான்கு வேதங்கள் ஓதுதல், நவ விளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. நேற்று, 9 குத்துவிளக்குகளை தெய்வங்களாக பாவித்து தீப ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹாதீபாராதனை நடைபெற்றது. தருமபுரம் வேத சிவாகம பாடசாலை மாணவர்கள் வேதபாராயணம் செய்தனர். தேவார பதிகங்கள் பாடப்பட்டது.   தருமபுரம் ஆதீனம் 27வது குருமஹா சன்னிதானம், ஶ்ரீலஶ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற யாக வேள்வியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !