உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா: சிறப்பு திருமஞ்சனம்

காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா: சிறப்பு திருமஞ்சனம்

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.


காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி வைபவம் துவங்கியதை அடுத்து, ராக்கால பூஜை முடிந்த பின், ரங்கநாயகி தாயார் சன்னதியில் விஸ்வக்சனர் பூஜை, லட்சுமி நாராயணர் பூஜை, புண்ணிய வசனம், கலச ஆவாஹனம் ஆகியவை நடந்தன. மூலவர் மற்றும் உற்சவர் ரங்கநாயகி தாயாருக்கு பால், தயிர், இளநீர், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. ரங்கநாயகி தாயாருக்கு பட்டுப் புடவை சாத்தி, வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ, மேள தாளங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து, சன்னதியை அடைந்தார். பின்பு மந்திர புஷ்பம், லட்சுமி அஷ்டோத்திரம், தீப ஆராதனை முடிந்து, குதிரை வாகனத்திற்கு கங்கணம் கட்டப்பட்டது. தீபாராதனை முடிந்த பின்பு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !