நத்தம் மேலத்தெரு பகவதி அம்மன் கோவில் திருவிழா
ADDED :18 hours ago
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி மேலத்தெரு மந்தை பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ஊர்வலமாக கரகம் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி,கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.