உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க விமர்சையாக தொடங்கியது. சுவாமி தெய்வானை பெரிய வைரத்தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 23ஆம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்தனர்.விழாவின் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது.இந்த நிலையில் இன்று சுப்பிரமணிய சுவாமி - தெய்வானைவெட்டிவேர் மாலை,மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு திருமண கோலத்தில் சன்னதி முன்பு இருந்த பெரிய வைர தேரில் எழுந்தருளினர்.பின்னர் பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காலை 6.45 மணியளவில் தேர் நிலையிலிருந்து புறப்பட்டு சென்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் பெரிய ரத வீதி வழியாக கிரிவலப் பாதையை சுற்றி வந்து பதினோரு மணிக்கு மேல் நிலையை வந்து அடையும். தேர் நிலையை வந்துஅடையும் வரை கோவில் நடை சாத்தப்படும் தேர் நிலைக்கு வந்த பின்னரே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தேரோட்ட நிகழ்வை காண திருப்பரங்குன்றம்,மதுரை, திருமங்கலம்,சோழவந்தான், உசிலம்பட்டி,மேலூர் உட்பட  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தேரோட்ட நிகழ்விற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேரை காண வரும் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !