கடையம் கோயில்களில் 17ம் தேதி: குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு!
ADDED :4922 days ago
ஆழ்வார்குறிச்சி : கடையம் கோயில்களில் வரும் 17ம் தேதி குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடக்கிறது. வியாழ பகவான் வரும் 17ம் தேதி மாலை 5.18 மணிக்கு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனையடுத்து கடையம் வில்வனவனநாதர் - நித்யகல்யாணி அம்பாள், கைலாசநாதர் - பஞ்சகல்யாணி அம்பாள் கோயில்களில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஹோமம், சிறப்பு அபிஷேகம், விஷேச பூஜைகள், சிறப்பு அலங்காரத்தில் குருபகவான் காட்சியளித்தல், புஷ்பாஞ்சலி சிறப்பு தீபாரதனை நடக்கிறது. குருபகவானுக்கு அபிஷேக பொருட்களை கொண்டு வருபவர்கள் வியாழக்கிழமை காலையில் கோயிலில் கொடுக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி முருகன் மேற்பார்வையில் சுந்தரபட்டர், முத்துக்குமாரசாமிபட்டர் செய்து வருகின்றனர்.