கிராம கோயில்களில் பக்தர்கள் தரிசனம்
ADDED :1915 days ago
சிவகங்கை: ஆடி வெள்ளியான நேற்று கிராமக்கோயில்களில் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் ஆகம விதிகளின்படி அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோயில் வாசல்களில் நின்று வணங்கினர். பலர் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கினர். கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் அரசு அனுமதி வழங்கியுள்ளதால் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.