பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1907 days ago
ஓசூர்: ஓசூரில், மாருதி நகர் முத்துமாரியம்மன் கோவில் எதிரே, பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கொரோனா கொடிய நோய் அழிந்து, மக்கள் குணமடைந்து, நாடு நலம் பெற வேண்டி, நேற்று அக்கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அப்பகுதி பொதுமக்கள் கோவில் முன் உப்பு, மஞ்சள், குங்குமம் போன்றவற்றை கொட்டி, வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை, பண்ணாரி அடிகளார் ராஜி, அகில பாரத ஹிந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு தலைவர் மணி உட்பட பலர் செய்திருந்தனர்.