அளவில்லா நன்மை உண்டாக ..
ADDED :1941 days ago
முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் அளவில்லா நன்மை உண்டாகும். குடும்பத்தில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேறும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு வாய்க்கும். முன்னோர் அருளால் ஏழ்மை அகன்று செல்வச் செழி்ப்புண்டாகும். கால்நடைச் செல்வம் பெருகும். உணவுக்கு குறைவிருக்காது. கிரக தோஷம் பறந்தோடும். ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி தோஷம் மறையும். நாள்பட்ட நோய் தீரும். ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். மனக்குழப்பம் அகலும். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவர். மொத்தத்தில் நல்லகாலம் பிறக்கும்.