உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பூரம், ஆடி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப்பூரம், ஆடி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோவை: ஆடி வெள்ளி, ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வழிபாடு மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில், பெண்கள், பொங்கலிடுதல், புற்றுக்கு பால் வார்த்தல், மாவிலக்கு போடுதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட, நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது வழக்கம். அதன்படி இன்று (ஜூலை.24) ஆடி வெள்ளி, ஆடிப்பூரத்தை முன்னிட்டு, கோவை,  கெம்பட்டி காலனி வன பத்திரகாளியம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  சிறப்பு அலங்காரத்தில் வன பத்திரகாளியம்மன் அருள்பாலித்தார். ஆடி வெள்ளியையொட்டி கோவை டி.கே மார்க்கெட்டில் உள்ள பிளாக் மாரியம்மன் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஊரடங்கு காரணமாக, அம்மன் கோவில்கள், பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !