பழம், காய்கறி, ரூபாயால் அலங்கரிப்பது ஏன்?
ADDED :1997 days ago
ஆனிமாத பவுர்ணமியில் பழம், காய்கறிகளால் சுவாமிக்கு அலங்காரம் செய்ய வேண்டும் என ஸூக்ஷ்மாகமம் மாஸாபிஷேக விதிபடலம் கூறுகிறது. உணவு அளித்த கடவுளுக்கு காய்கறிகளால் அலங்கரித்து நன்றி சொல்கிறோம். ரூபாய் நோட்டை வெறும் காகிதமாக பார்க்கக்கூடாது. அதன் மூலம் தங்க நாணயம் வாங்கலாம். அதை ஸுவர்ண புஷ்பமாகக் கருதி அவற்றாலும் அலங்கரிக்கலாம்.