அம்மனின் பெயர் ஆடிப்பூரம்
ADDED :1938 days ago
கும்பகோணம்- சென்னை சாலையில் 23 கி.மீ., துாரத்தில் உள்ள சிவத்தலம் திருப்பனந்தாள். பனங்காடாக விளங்கிய இங்கு சிவன் மேற்கு நோக்கி தாலவனேஸ்வரர் என்னும் பெயரில் அருள்கிறார். கிழக்கு நோக்கியபடி தால வனேஸ்வரி என்ற பெயரில் அம்மன் இருக்கிறாள். தலவிருட்சம் பனைமரம். சுயம்பு மூர்த்தியான சிவனை பிரம்மா,விஷ்ணு, இந்திரன், அகத்தியர், நாக கன்னியர் வழிபட்டு நற்கதியடைந்தனர். தாலவனேஸ்வரி சன்னதியில் ‘ஆடிப்பூர அம்மன்’ என்னும் பெயரில் ஒரு அம்பிகை காட்சியளிக்கிறாள். ஆடிப்பூரத்தன்று இங்கு வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். தலவிருட்சமான பனைமரத்தின் அருகில் கிணறாக உள்ள நாக கன்னிகை தீர்த்தத்தில் நீராட நாகதோஷம் நீங்கி திருமணயோகம் ஏற்படும்.