பல்லடத்தில் பக்தர்கள் அங்க பிரதட்சணம்
ADDED :1997 days ago
பல்லடம்: உலக நாடுகள் அனைத்தும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தியாவில், கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும், இந்தியாவில் நோய் தொற்று இன்னும் குறையவில்லை. இச்சூழலில், கொரோனா பாதிப்பு நீங்க, பல்லடத்தில் பக்தர்கள் இருவர், ஸ்ரீதண்டாயுதபாணி கோவிலில் முன், அங்க பிரதட்சணமாக வலம் வந்து, முருகனை வழிபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கொரோனா பாதிப்பு நீங்கவும், மாரடைப்பு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் அண்ணாதுரை குணமடைந்து திரும்பவும் வேண்டி அங்க பிரதட்சணம் செய்கிறோம் என்றனர். பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் பலர் உடன் பங்கேற்றனர்.