உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடியில் ஆடிப்பூர திருவிழா: வளையல் அலங்காரத்தில் அம்மன்

காரைக்குடியில் ஆடிப்பூர திருவிழா: வளையல் அலங்காரத்தில் அம்மன்

 காரைக்குடி: ஆடி வெள்ளி, ஆடிப்பூர விழாவான நேற்று ஊரடங்கு காரணமாக, தரிசனத்திற்காக கோயில்கள் திறக்கப்படாத நிலையிலும், வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன், முத்துமாரியம்மன், மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்பாள் சிறப்பு வளையல் அலங்காரத்தில் காட்சி அளிப்பார். சிறப்பு அபிஷேகத்திற்கு பின் குழந்தை இல்லாதோர், திருமணம்  ஆகாத பெண்கள், சுமங்கலி பெண்கள் அம்மனுக்கு சாத்திய வளையலை வாங்கிகொள்வர். ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லாத நிலையிலும், வெளிபிரகாரத்தில் அம்பாளை தரிசித்து வளையலை வாங்கி சென்றனர்.தேவகோட்டை:  அன்னை அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனர். அதே போன்று காமாட்சி அம்மன், புவனேஸ்வரி அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !