உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி சிறப்பு வழிபாடு

புத்தேரி பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி சிறப்பு வழிபாடு

பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஷேத்திரம் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், கருட பகவானுக்கு கருட பஞ்சமி சிறப்பு வழிபாடு நடந்தது.இதனை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணியளவில் உலக நன்மை வேண்டி, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 10:15 மணியளவில் பிரகாரத்தில் உள்ள கருட பகவானுக்கு விசேஷ திருமஞ்சனம்; 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பூஜையின் போது, பக்தர்கள் இன்றி, அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !