உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நவக்கிரக சாந்தி ஹோமம்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நவக்கிரக சாந்தி ஹோமம்

காரைக்கால்; திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நடந்த நவக்கிரக சாந்தி ஹோமத்தை முதல்வர் நாராயணசாமி தனது வீட்டில் இருந்தபடி இணையதளத்தின் மூலம் தரிசனம் செய்தார்.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் நவக்கிரக சாந்தி ஹோமம் கொரோனா தொற்று காரணமாக அரசு உத்தரவின்படி நிறுத்தப்பட்டது. தற்போது அரசு வழிகாட்டுதல்படி கோவில் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் வசதிக்காக நிறுத்தப்பட்ட நவக்கிரக சாந்தி ஹோமம் கோவில் நிர்வாகம் சார்பில் இணையதளம் வழியாக பூஜை (இ.நவகிரஹ சாந்தி ஹோமம்) என்கிற முறையில் பக்தர்கள் இல்லத்திலிருந்து ஹோமத்தில் பங்கு பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதன் துவக்க விழா நேற்று நடந்தது. கோவில் ஹோம மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் மேற்கொண்ட பூஜைகள் அனைத்தும் இணையதளம் வழியாக இ.நவக்கிரஹ சாந்தி ஹோமம் முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் துவக்கப்பட்டது.இதில் காலசந்தி ஹோம பூஜையில் இணைய தொடர்பு மூலம் முதல்வர் வீட்டிலிருந்தே சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !