வரலட்சுமி விரதம், ஆடி வெள்ளி கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :1991 days ago
அம்மனுக்கு உகந்த வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் கவாடக்காரத்தெரு காளியம்மனுக்கு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. உடுமலை மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு விரதமிருந்து நோன்புக் கயிறு மற்றும் பலகாரங்களுடன் புது வண்ணாரப்பேட்டை, லட்சுமி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில் வரலட்சுமி நோம்பை முன்னிட்டு எம்பெருமானுடன் மகாலட்சுமி, ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா காரணமாக, பொது மக்கள் நலனை முன்னிட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படவில்லை.