உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருஞானசம்பந்தர் மீது அவதுாறு சிவனடியார்கள் நுாதன முறையீடு

திருஞானசம்பந்தர் மீது அவதுாறு சிவனடியார்கள் நுாதன முறையீடு

திருப்பூர் : திருஞானசம்பந்தரை தவறாக விமர்சித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவனடியார் திருக்கூட்டத்தினர், கோவில் வாசலில் திருமுறை பாராயணம் செய்தனர்

திருஞானசம்பந்தரை இழிவுபடுத்தும் வகையில், சமீபத்தில், யு டியூப் வீடியோ வெளியானதால், சிவனடியார் திருக்கூட்டத்தினர் கொதித்தெழுந்து உள்ளனர்.சுந்தரவள்ளி என்பவர், திருஞானசம்பந்தர் பாடிய தேவார பாடல்களின் அர்த்தம் புரியாமல், தவறாக விமர்சித்துள்ளார்.விமர்சனம் செய்தவர்கள், பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என, சிவனடியார்கள் எச்சரித்துள்ளனர். திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன் நேற்று கூடி, சமூக இடைவெளியுடன், தேவார திருமுறை பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனர்.

திருப்பூர் சிவனடியார் திருக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: சிவனடியார்கள் மனதை புண்படுத்தும் வகையில், விமர்சித்த நபர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது சட்ட ரீதியாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். மத மோதல்களை உருவாக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !