அய்யர்மலையில் கோவில் ஐந்து உண்டியலில் ரூ.5 லட்சம் காணிக்கை
ADDED :1901 days ago
குளித்தலை: அய்யர்மலையில், கோவிலில் இருந்த ஐந்து உண்டியல்களில், பக்தர்கள் வழங்கிய ஐந்து லட்சத்து, 5,712 ருபாய் காணிக்கை இருந்தது. குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில் இருந்த, ஐந்து உண்டியல்கள் மாவட்ட ஹிந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர் சூரியநாராயணன் தலைமையில், திருச்சி உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. இதில், பக்தர்கள் வழங்கிய காணிக்கையை கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழியர்கள் எண்ணினர். மொத்தம், ஐந்து லட்சத்து, 5,712 ரூபாய் இருந்தது. பணத்தை, கோவில் கணக்கில் இந்தியன் வங்கியில் வரவு வைக்கப்பட்டது.