சந்தியா வந்தனம் என்றால் என்ன?
ADDED :1904 days ago
சந்தி என்றால் சந்திப்பது என்பது பொருள். இரவும் பகலும் சந்திக்கும் காலம் காலை சந்தி என்றும், காலையும் மதியமும் சந்திக்கும் பொழுதை மதிய சந்தி அல்லது மத்தியானம் என்றும், பகலும், இரவும் சந்திப்பதை சாய சந்தி என்றும் கூறுவர். இந்த சந்தி காலத்திற்கு அதிதேவதையாக இருப்பவள் சந்தியா. இந்த சக்தியை மூன்று காலத்திலும் வழிபடுவதே சந்தியா வந்தனம்.