மகாவிஷ்ணுவை விராட்புருஷன் என்பது ஏன்?
ADDED :1903 days ago
ஊழிக்காலத்தில் உலகம் அழிந்து விடும். மீண்டும் உலகைப் படைக்க அளவிடமுடியாத சக்தியுடன் ஆயிரம் தலைகள், கைகளுடன் பிரம்மாணட வடிவத்தில் மகாவிஷ்ணு அவதரிப்பார். அவரிடமிருந்தே பூமி, சூரியன், சந்திரன் உள்ளிட்ட கிரகங்கள் உயிர்கள் எல்லாம் உற்பத்தியாகும். இந்த வடிவத்தில் மகாவிஷ்ணு தனக்கென தலைவன் இல்லாதவராக விராட்புருஷன் என பெயர் பெறுகிறார். வி+ராட்= தலைவன் இல்லாதவர். ஒப்புமை இல்லாத ஆற்றல் கொண்டவர் என பொருள்படும்.