தீ அனலானது எப்படி தெரியுமா?
ADDED :1923 days ago
தீ என்பது தமிழ்ச் சொல். நெருப்பு என்றும் சொல்லலாம். அனல் என்பது சமஸ்கிருத வார்த்தை. அக்னியை அனலன் என்பர். அனலன் என்றால் திருப்தி அடையாதவன் எனப் பொருள். யாருக்கெல்லாம் போதும் என்ற புத்தி இல்லையோ அவர்கள் அனைவருமே அனலன் என்று கருதப்படுவார்கள். யாக குண்டத்தில் எரியும் அக்னியில் நெய்யை ஊற்ற ஊற்ற அது போதும் எனச் சொல்லுமா ? சொல்லவே சொல்லாது. எனவே தான் நெருப்புக்கு அனல் என்ற சொல் ஏற்பட்டது. மனதில் ஏற்படும் ஆசைகளும் குறையவே செய்யாது. அதனால் தான் ஆசைத்தீ கொழுந்து விட்டெரிந்தது என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.