ஐம்பொன் சிலைகள் மீட்பு: 3 பேர் கைது
ADDED :1975 days ago
தஞ்சாவூர்; ஐம்பொன் சிலைகளை திருட முயன்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்து, இரண்டு சிலைகளை மீட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த புக்கரம்பை கிராமத்தில், சாமி சிலைகள் விற்பனை செய்ய போவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சாமி சிலைகளை திருடி விற்க முயன்ற, 36 வயதுடைய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, இரண்டு ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.