திருமலையில் பவுர்ணமி கருட சேவை: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
ADDED :1950 days ago
திருப்பதி; திருமலையில் பவுர்ணமி கருட சேவை நடந்தது. திருமலை ஏழுமலையான் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி அன்று மாலையில், கருட சேவை நடக்கும்.
தற்போது, கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதால், ஏப்., முதல், கருட சேவை ரத்து செய்யப்பட்டு, கோவிலுக்குள் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் நடந்தது.நேற்று ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, மாலை, 6:௦௦ மணிக்கு ரங்கநாயகர் மண்டபத்தில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதில், தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.