உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்

இந்து கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்

காரைக்கால் : காரைக்காலில் இந்து கோவில் அமைந்துள்ள தனது நிலத்தை இஸ்லாமியர் அமைச்சர் முன்னி லையில் கோவில் நிர்வாகத்திடம் தானமாக வழங்கினர்.

காரைக்கால், கீழகாசாக்குடி காஞ்சிபுரம் கோவில்பத்து சாலையில் உள்ள ஒற்றை பனை மரத்தின் அடியில் சூலம் வைத்து ஒத்தை பனைமர முனீஸ்வரர் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வழிப்பாட்டு வந்தனர். தற்போது கோவிலை சுற்றி வயல்கள் மற்றும் குடியிருப்புகள் பல உள்ளது. இதனால் இந்த இடத்தில் ஆனந்த விநாயகர், ஒத்தை பனை மர முனீஸ்வரன், சமுத்திர துர்க்கை உள்ளிட்ட சுவாமிகளுக்கு கோவில்கள் கட்டப்பட்டு, பௌர்ணமி பூஜை மற்றும் திங்கள் கிழமைகளில் முனீஸ்வரர் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த கோவில் அமைந்துள்ள நிலம், இஸ்லாமியரான சின்னதம்பி (எ) அப்துல்காதர் என்பவருக்கு சொந்தமானது. அவர், கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, தனது சொந்த நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்க முன்வந்தார்.அதனையொட்டி நேற்று முன்தினம் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலையில் கோவில் அமைந்துள்ள நிலத்தை தானமாக வழங்கினார். அதனை முனீஸ்வரர் கோவில் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.இந்து கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமிய் அப்துல்காததை, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !