உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பர் கூட்டத்தை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கருப்பர் கூட்டத்தை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெ.நா.பாளையம்:  இந்து கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட,, கருப்பர் கூட்டத்தை கண்டித்து, பல்வேறு இந்து அமைப்பினர் இடையர் பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம், தடாகம் ரோடு, இடையர்பாளையம் சந்திப்பு மாகாளியம்மன் கோவில் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், 12 அடி நீள அலகு குத்தி முருக பக்தர் கார்த்தி ஊர்வலமாக வந்தார். மேலும், பலர் காவடி ஏந்தியும், கைகளில் வீரவேல் உருவத்தை வரைந்தும் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில், பா.ஜ., கட்சியின், கோவை மாவட்ட மகளிர் அணி செயலாளர் மைதிலி மண்டலத் தலைவர் வினோ, மண்டல பொதுச் செயலாளர்கள் தினேஷ்குமார், வினோத்குமார் மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த தம்பி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !