உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி மடத்தில் ராமர் சிலைக்கு சிறப்பு பூஜை

சிருங்கேரி மடத்தில் ராமர் சிலைக்கு சிறப்பு பூஜை

சிருங்கேரி: அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்த நிலையில், சிருங்கேரி மடத்தில் உள்ள ராமர் சிலைக்கு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

உ.பி., மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று(ஆக.,5) நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதையொட்டி, கர்நாடக மாநிலம், சிருங்கேரி சாரதா பீடம் மடத்தில், ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சன்னிதானம் மற்றும் ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் ஆகியோர் சிறப்பு பூஜை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !