நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தீப வழிபாடு
ADDED :1943 days ago
நாமக்கல்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறுவதையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆன்மிக வேள்வி அமைப்பு சார்பில், தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அமைப்பின் நிர்வாகிகள் செங்கோடன், டாக்டர் குழந்தைவேலு, பேராசிரியர் அரசு பரமேசுவரன், குருவாயூரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் நெய்தீபம் ஏற்றி மலர் தூவி, ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷமிட்டு ஆஞ்சநேயர் வழிபாடு செய்தனர். இதில் பக்தர்களும் பங்கேற்றனர்.