உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தியில் பூமி பூஜை பக்தர்கள் சிறப்பு வழிபாடு

அயோத்தியில் பூமி பூஜை பக்தர்கள் சிறப்பு வழிபாடு

மதுரை, அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் பூமி பூஜை நேற்று நடந்ததையொட்டி மதுரை மாவட்டத்தில் பக்தர்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.மதுரை எஸ்.எஸ்.காலனி வி.எச்.பி., அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். நிர்வாகிகள் பெரியமருது, கணேசன், ரமேஷ்பாபு, முருகன் பங்கேற்றனர். நேரு ஆலால விநாயகர் கோயிலில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் ராம மந்திர பாராயணம் பாடப்பட்டது. மாநில அமைப்பாளர் சுடலைமணி, மாவட்ட தலைவர் கிருஷ்ணா, நிர்வாகிகள் நாராயணன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வீடுகளில் பக்தர்கள் விளக்குகள் ஏற்றினர்.திருப்பரங்குன்றத்தில் ஆன்மிக பேரவை தலைவர் ரவிசங்கர், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் அன்பழகன், சுப்பிரமணியன், அகில பாரத அனுமன் சேனா நிர்வாகிகள் ராமலிங்கம், சக்திவேல் இனிப்பு வழங்கினர். திருமங்கலத்தில் பா.ஜ., மாவட்ட துணை தலைவர் சரவணகுமார் தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டது. உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் பா.ஜ., மாவட்ட தலைவர் சுசீந்திரன், நகரத் தலைவர் பாண்டிய ராஜன் சிறப்பு பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !