லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1896 days ago
கரூர்: அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்ற நோக்கில், கரூர், திருக்காம்புலியூர் லட்சுமி நரசிம்மர் கோவில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. அங்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன், மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் விஜய் உட்பட பலர் பங்கேற்றனர்.