புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா நிறைவு
புவனகிரி: மகான் ராகவேந்திரர் பிறந்த புவனகிரியில் இந்த ஆண்டின் 33 வது ஆராதனையின் மூன்றாம் நாள் விழாவில் உத்திர ஆராதனையில் மந்ராலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விசேஷ பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
மகான் ராகவேந்திரர் பிறந்த புவனகிரியில் உள்ள அவரது புனித இடத்தில் ஆராதனை விழா கடந்த 32 ஆண்டுகளாக வெகு விமர்சியாக நடந்து வருகிறது. தற்போது 33 வது ஆராதனை விழா கடந்த 4 ம் தேதி காலை 9.00 மணிக்கு பூர்வ ஆராதனையுடன் துவங்கியது. நேற்று காலை பூர்வ ஆராதனை விழாவை முன்னிட்டு மந்ராலயத்தின் மரப்பு படி பல்வேறு திரவியங்கள், நறுமணப்பொடிகளால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இன்று இந்த ஆண்டிற்கான ஆராதனை நிறைவு தினத்தில் உத்திர ஆராதனை நிகழ்ச்சியில் மந்ராலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விசேஷ பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அல்காரத்தை ரகு மற்றும் ரமேஷ் ஆச்சாரியர்கள் நடத்தினர். பிற்பகல் 2.00 மணிக்கு பல்வேறு பூஜைகளுக்குப் பின் மகான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை கவுரவ தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலர் டாக்டர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேலு உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந்தனர்.