ராமர் கோயிலுக்காக சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1982 days ago
அருப்புக்கோட்டை: பந்தல்குடி அன்பு மாடல் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் ஸ்ரீ சாய்ராம் டிரஸ்ட் சார்பாக அயோத்தியில் ராமர் கோயில் பணி சிறப்பாக அமையும், உலக நன்மை, கொரோனா வைரசிலிருந்து மக்கள் விடுபட சிறப்பு பூஜைகள் நடந்தது. வண்ண பூக்களால் இந்திய வரைபடம் போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தனி மனித இடைவெளி, முகக் கவசம் அணிந்தப்படி பக்தர்கள் கலந்து கொண்டு ராம நாமம் ஜெபித்தனர். ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகி மனிததேனீ சுந்தரமூர்த்தி தலைமையில் செய்தனர்.