நரகத்திலிருந்து தப்பணுமா...
ADDED :1989 days ago
ஒருமுறை நாயகம், ‘‘நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லிவிட்டு நரகத்தை பார்த்து பயப்படுவது போல முகத்தை திருப்பிக் கொண்டார். அதை பார்த்த சிலர் நரகத்தை பார்க்க விரும்புகிறாரோ எனக் கருதினர். ‘‘ஒரு துண்டு பேரீச்சம் பழத்தை தர்மம் செய்தால் நரகத்திலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளலாம். அதே போல் இனிய சொற்களைப் பேசினால் நரகத்திலிருந்து தப்பலாம்’’ என்றார்.