உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லதை விதைப்போம்

நல்லதை விதைப்போம்


 இலங்கையிலுள்ள மிருகக் காட்சி சாலைக்குச் சென்றான் சிறுவன் ஒருவன்.  கூண்டில் ஒரு கரடியும், அதன் குட்டியும் இருந்தது.  கூண்டுக்கு வெளியே, ‘தொந்தரவு செய்ய வேண்டாம்’’ என  எழுதியிருந்தது.   
ஆனால் சிறுவன்  மற்ற சிறுவர்களோடு சேர்ந்து கரடி மீது கற்களை வீசினான். கரடி உறுமியது. சிறுவன் தொடர்ந்து கற்களை வீசினான். ஒரு கல் குட்டியின் மீது பட, கூண்டை விட்டு வெளியே வந்த கரடி சிறுவனை பிடித்து கிழித்தெறிந்தது.  சிறுவனிடம் நல்லெண்ணம் இல்லாததால் தான் கரடியை துன்புறுத்தினான்.
எதை விதைக்கிறாமோ அதை அறுப்போம் என்பது தெரிந்தும் சிலர் தவறுகளை செய்து பிரச்னையில் சிக்குகிறார்கள்.  நல்லதை விதைத்து நன்மையை அறுவடை செய்வோம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !