உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொறுமை பலம் மிக்கது

பொறுமை பலம் மிக்கது


* பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும். இனிய நாக்கு எலும்பையும் நொறுக்கும்.
* தேனாக இருந்தாலும் அளவாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் திகட்டி விடும்.
* இனிய சொற்கள் மனதிற்கும், உடம்புக்கும் நலம் தரும்.
* நன்மை செய்யவும் பகிர்ந்து கொடுக்கவும் மறக்காதீர்கள்.
* தர்மம் செய்வதை தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள்.
* மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன் வாழுங்கள்.
* உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள். சபிக்க வேண்டாம்.
* சண்டையிடும் இடத்தில் விருந்து உண்பதை விட அமைதியுடன் பழஞ்சோறு சாப்பிடுவது மேல்!
* புகழ்ச்சியை மிகுதியாக விரும்புவது நல்லதல்ல.
* கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்.
* கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர்.
* வேண்டுதல்களும், இரக்கச் செயல்களும் கடவுளைச் சென்றடையும்.
பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !