நோய் தீர்க்கும் சந்திரன்!
ADDED :1905 days ago
தட்சனின் மகள்கள் 27 பேரை சந்திரன் திருமணம் செய்து கொண்டான். அவர்களில் கார்த்திகை, ரோகிணி இருவரிடம் மட்டும் அன்பு காட்டினான். இதையறிந்த தட்சன், சந்திரனுக்கு க்ஷயரோகம் ஏற்பட சாபமிட்டான். இதனால், சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயத் தொடங்கின. அவன் சிவபெருமானை தியானித்து வழிபாடு செய்தான். சிவனருளால் நோய் நீங்கப்பெற்றான். சந்திரனை ஜோதிடத்தில் மனோகாரகர் என்று குறிப்பிடுவர். இவருக்கு சிவன்கோயில்களில் சந்நிதி இருக்கும். இவரை வழிபட்டால் நோய்நொடி நீங்குவதோடு, ஆரோக்கியம் பெருகும்.