விநாயகர் சதுர்த்தி விழா சிலைகள் தயாரிப்பு தீவிரம்
ADDED :1888 days ago
உடுமலை: உடுமலையில், விநாயகர் சதுர்த்திக்காக, சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.விநாயகர் சதுர்த்திவிழா, வரும், 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகள், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.வழிபாடு நடத்துவதற்காக, உடுமலை பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. வடிவத்தை பொறுத்து, 100 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விலை உள்ள சிலைகள் தயாரிக்கப்படுவதாகவும், நடப்பாண்டு அதிகம் விற்பனையாகும் என்ற எதிர்பார்பில் சிலைகள் தயார் செய்து வருவதாகவும், தொழிலாளர்கள் தெரிவித்தனர்.