உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணக்குள விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா, பிரமோற்சவம் ரத்து

மணக்குள விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா, பிரமோற்சவம் ரத்து

புதுச்சேரி : கொரோனா பரவல் காரணமாக, மணக்குள விநாயகர் கோவிலில் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா, பிரமோற்சவ விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தரிசனம் மட்டும் நடைபெறும்.


மணக்குள விநாயகர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மத்திய மாநில அரசுகளின் விதிமுறைப்படி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழா, 23ம் தேதி துவங்கி 24 நாட்கள் நடைபெறும் 62வது பிரமோற்சவ விழா, செப். 15ம் தேதி துவங்கி 7 நாட்கள் நடைபெறவுள்ள 77ம் ஆண்டு திருபவித்ரோற்சவ விழா ஆகிய விழாக்கள், உற்சவங்கள் அனைத்தும் பொதுமக்கள் நலன் கருதி ரத்து செய்யப்படுகிறது. 22ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மணக்குள விநாயகருக்கு தேவஸ்தானம் சார்பில் அபிஷேகம், தீபாராதனை செய்து, பொதுமக்கள் தரிசனத்திற்காக மூலவர் மணக்குள விநாயகர் மற்றும் உற்சவ விநாயகர் தங்க கவசத்தில் அருள்பாலிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !